Friday, September 14, 2012

(ADD by: s.kirishanthraj)



நாம் யாழ் காணிப்பிரச்சினை தொடர்பாக ஆராய்ந்தபோது பல்வேறு தகவல்கள் எமக்கு கிடைக்கப்பெற்றன...
காணிப்பிரச்சினை எனும்போது இரு வகையான பிரச்சினைகள் உள்ளதாக காணிப்பதிவுகள்  ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். அவை
1 .தனியார் காணி
2 .அரச காணி தொடர்பான பிரச்சினைகளாகும்...
                                                   
                            யாழில் அரச காணிகள் 2  வீதமே உள்ளதாக காணிப்பதிவுகள்  ஆணையாளர் நாயகம் தயானந்தன் தெரிவித்தார்... மீதமாக உள்ள பெரும்பாலான காணிகள் தனியார் காணிகளாகும். தனியார் காணிகளிலும் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன... அவை....
1.யுத்தத்தின் காரணமாக மக்கள் தங்களது காணிகளை விட்டு இடம்பெயர்ந்தமையால் தற்போது அக்காணிகளில் வேறு சிலர் குடியேறியுள்ளமை .....
2.யுத்தத்தினால் யாழ்பாணத்திலிருந்த முஸ்லிம் மக்கள் புத்தளம் கொழும்பு போன்ற இடங்களுக்கு இடம்பெயர்ந்தார்கள், இதனால் தற்போது அவர்களால் (சில இடங்களுக்கு) மீள் குடியேற முடியாதுள்ளமை.
3. மக்களால் தங்களது காணிகளை அடையாளம் காணமுடியாதுள்ளமை.
4.யுத்த காலத்தில் தங்கது காணிகளை குறைந்த விலைக்கு விற்றுவிட்டு மீண்டும் தற்போது அக்காணிகள் தங்களது காணிகளென உரிமம் கோருவது.
5.வணக்கஸ்தளங்கள், மயானம், விவசாய நிலையங்கள் போன்றவை அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ளமை....
                                                  
                                                                                                                                                                                                                                                                                                                                         

                                                                         வணக்கஸ்தளங்கள், மயானம், விவசாய நிலையங்கள் போன்றவை அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ளமையால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை அனுபவித்து வருகின்றனர். இதேவேளை கிட்டத்தட்ட 600  வீடுகள் அதி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ளதாகவும் அவற்றில் பெரும்பாலும் இராணுவத்தினர் உள்ளாதாகவும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் தெரிவித்தார்.. இராணுவத்தினர் அவ்வீட்டு உரிமையாளர்களுக்கு வாடகை வழங்குவதாகவும் ஆயினும் உரிமையாளர்கள் தங்களது காணிகளை தங்களிடம் ஒப்படைக்குமாறு கோருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இப்பிரச்சினைகள் தொடர்பாக அவர் மேலும் கூறிய முக்கிய தகவல்கள் வருமாறு....

                    #முன்பு அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் 32 கிராம சேவகர் பிரிவுகள் இருந்தது, அவை படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது 18 கிராம சேவகர் பிரிவுகளே உள்ளன. அவற்றுள் குறைந்தது 10  கிராம சேவகர் பிரிவுகளையாவது மீட்க முயற்சிப்போம்.
                  #எந்த நாடாக இருந்தாலும் யுத்தம் இடம்பெற்றால் அங்கிருந்து இராணுவ பிரசன்னம் உடனடியாக நீக்கப்படுவதில்லை. இலங்கையிலும் அதேபோல் தான் படிப்படியாகவே குறைக்கப்படும்.
                   #காணிப்பிரச்சினைகளை குறைபதட்காக அரசால் ஒரு திட்டம் கொண்டுவரப்பட்டது, அத்திட்டத்தின் கீழ் அனைத்து காணிகளும் பதிவு செய்யப்பட வேண்டுமென கூறப்பட்டது. ஆயினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் அத்திட்டத்திற்கு  எதிராக நீதிமன்றில் வழக்கொன்றை தாக்கல் செய்தமையால் அத்திட்டம் தோல்வியடைந்தது...
                   #அதிகளவான விளைச்சலை  தரக்கூடிய விவசாய நிலப்பகுதிகள் அதியுயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ளன. அவற்றையும் மீட்க முயற்சி எடுத்து வருகின்றோம்...
                  #யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் வெளிநாடுகளிலும் வெள்ளவத்தை போன்ற இடங்களிலும் தற்போது வசித்து வருகிறார்கள் அவர்கள் மீண்டும் யாழில் குடியேறினால் அவர்களுக்கான உதவிகள் அரசால் வழங்கப்படும்....
                 #ஆயினும் அவ்வாறு தற்போது வெளிநாடுகளிலும் ஏனைய பகுதிகளிலும் வசிப்போர் மீண்டும் யாழ்ப்பாணத்தில் வந்து வசிப்பதற்கு தயங்குகின்றனர். காரணம் அங்குள்ள  வசதிகள் இங்கு இல்லை என அவர்கள் நினைக்கின்றனர்....
                 #அதியுயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களது காணிகளில் கடற்படையினர் மண், கல் போன்றவற்றை எடுத்துசெல்வதாக ஒரு குற்றச்சாட்டும் உள்ளது. அது உண்மை. இப்பிரச்சினையை தீர்க்கவும் நாம் முயற்சி எடுத்து வருகின்றோம்.       என அவர் தெரிவித்தார்....
                                                                                                                  
                                                          யாழ் கீரிமலை பகுதியிலிருந்து மண், கற்களை கடற்படை ஏற்றிசெல்வதால் விவசாய நிலப்பகுதி பாதிக்கப்படுவதாகவும்  அப்பகுதி மக்கள் அங்கலாய்க்கின்றனர். இவ்வாறு அங்கிருந்து மண்ணை ஏற்றிசெல்வதால் தங்களது காணிகள் பள்ளமாவதாகவும் அவைற்றை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர கடற்படையால் முடியுமா எனவும் அப்பகுதி  மக்கள் கேள்வியெளுப்புகின்றனர். இது தொடர்பாக யாழ் கடற்படை தளபதியை சந்தித்து பேசியதாகவும் தங்களது காணிகளுக்கான உறுதிப்பத்திரத்தின் பிரதியை அவரிடம் கையளித்ததாகவும் அப்பகுதி மக்கள் மேலும் தெரிவித்தனர்.....

                

No comments:

Post a Comment